பக்கம் இரண்டு
மதம் ஏன் அடிக்கடி பிரிவினைகளை ஏற்படுத்தி, பகையுணர்வை ஊக்குவித்து, சமயப்போர்களை ஆதரித்துவந்திருக்கிறது? மதம் ஏன் இந்தளவுக்கு வாதத்துக்குரிய பொருளாக இருக்கிறது? அது எப்பொழுதுமே அப்படித்தான் இருக்குமா? இந்த வெளியீடு முதல், மதத்தையும் அதன் எதிர்காலத்தையும்—நீங்கள் உட்பட இன்று உயிருடனிருக்கும் ஒவ்வொரு நபரையும் பாதிக்கும் ஓர் எதிர்காலத்தையும் குறித்த ஓர் ஆழ்ந்த ஆய்வை மேற்கொள்வதில் “விழித்தெழு!” மகிழ்ச்சியடைகிறது. இந்த ஆய்வு “விழித்தெழு!” வின் இந்த இதழிலும் இதைத் தொடர்ந்து வரும் அடுத்த 23 இதழ்களிலும் படிப்படியாக இடம்பெறும்.