தாக்கப்படும் மனைவிகள் மூடியிருக்கும் கதவுகளின் பின்னால் ஒரு நோட்டம்
மனைவியை அடிக்கும் பிரச்னை எல்லாக் கல்வி, சமுதாய மற்றும் பொருளாதார எல்லையையும் கடந்து நிற்கிறது. ஒவ்வொரு வம்சத்திலும் மனித இனத் தொகுதியிலும், கிறிஸ்தவமல்லாத மதங்களிலும், “கிறிஸ்தவ” மதத்திலும் மனைவிகளை அடிப்பவர்கள் உண்டு. அவர்கள் மருத்துவர்களாக, வழக்கறிஞர்களாக, வியாபாரிகளாக, நீதிபதிகளாக, காவலாளர்களாக, தெருவிலுள்ள சாதாரண மனிதர்களாக இருக்கிறார்கள். அவர்களில் ஆறு இலக்க வருமானமுடையவர்களும் நல வாழ்வுத் துறையிலுள்ள ஆண்களும் அடங்குவர்.