உங்கள் கேஸட் டேப்புகளுக்குச் சில துப்புகள்
கேஸட் ரிக்கார்டரின் ப்ளே பட்டனை அழுத்திவிட்டு, சாய்ந்து உட்கார்ந்து பொழுதுபோக்க ஆயத்தமாகிறீர்கள். ஆனால் திடீரென்று அந்தத் தெளிவான, துல்லியமான சப்தம் கீச்சென்று போகிறது. குதித்தெழுந்து பார்க்கிறீர்கள், ஆனால் தாமதமாக எழுந்தீர்கள். உங்களை இன்பத்தில் ஆழ்த்திய கேஸட் டேப் இப்பொழுது பயங்கரமாகச் சிக்கிக்கொண்டிருக்கிறது. நீங்கள் பதிவு செய்தவையும் நாசமாயின.
இதுபோன்ற காரியங்கள் அடிக்கடி சம்பவிக்கின்றன, ஆனால் அதைத் தவிர்க்க நீங்கள் செய்யக்கூடிய சில காரியங்கள் இருக்கின்றன. அதே சமயத்தில் நீங்கள் பதிவு செய்திருப்பவற்றிலிருந்து அதிகத்தைப் பெற்றிடவும் முடியும். இதோ, உங்கள் கேஸட் டேப்புகளுக்குச் சில துப்புகள்:
◼உங்கள் கேஸட்டுகளை அவற்றின் பெட்டிகளிலேயே பாதுகாப்பாக வைக்கவும். இது அவற்றைத் தூசியிலிருந்து பாதுகாப்பதுடன், டேப் தளராதிருக்க அதன் உருளைகளைப் பூட்டிவைக்கும். இது டேப் உள்ளே சிக்கிக்கொள்வதன் ஆபத்தைக் குறைக்கிறது.
◼கேஸட்டுகளை சூடேறும் இடத்தில் அல்லது சூரிய வெளிச்சத்தில், உதாரணமாக, உங்கள் காரின் பின் சன்னலின் சாமான்கள் வைக்கும் மேடைப் பகுதியில் வைக்காதீர்கள்.
◼உங்கள் கேஸட்டுகளை ஒலிப்பெருக்கிகளுக்கு அருகாமையிலோ, தொலைக்காட்சிப் பெட்டியின் மேலோ, தொலைப்பேசிக்கு அருகாமையிலோ, அல்லது காந்தப்புலம் கொண்ட வேறு பொருட்களின் பக்கத்திலோ வைக்காதீர்கள். அவை நீங்கள் பதிவு செய்திருப்பவற்றைப் பகுதியாகவும் அல்லது முழுமையாகவுங்கூட அழித்துவிடும்.
◼காந்தத் தலைகளையும், டேப்பை ஓட்டிடும் உருளைகளையும், டேப்பின் பாதையிலிருக்கும் எல்லா உலோகப் பாகங்களையும் தவறாமல் சுத்தம் செய்யுங்கள். டேப் அறையின் கதவைத் திறந்து இந்தப் பகுதிகளை நீங்களே அநேகமாக சுத்தம் செய்ய முடியும். ரிக்கார்டரை உபயோகிப்பதற்கான ஆலோசனைக் குறிப்புகள் வித்தியாசமாக இருந்தால் தவிர, பஞ்சு குச்சிகள் கொண்டும், ஐசோப்ராப்பில் ஆல்கஹால் (isopropyl alcohol) கொண்டும் சுத்தம் செய்யலாம். தலைகளில் அழுத்துவதைத் தவிர்க்கவேண்டும், ஏனென்றால் அதன் நிலை மிகவும் கவனமாக அமைக்கப்பட்டிருக்கிறது. உண்மைதான், நீங்கள் எந்தப் பஞ்சுத் துணுக்குகளையும் ரிக்கார்டரில் விட்டுவிடக்கூடாது.
◼டேப் ரிக்கார்டரின் நல்ல இயக்கத்திற்குப் பாதகமாயிருக்கும் எஞ்சிய காந்தநிலையைப் போக்குவதற்கு ஓர் காந்தசக்தி இளக்கி அதிக உதவியாக இருக்கிறது. ஆனால் டேப் ரிக்கார்டருக்குச் செல்லும் மின்னோட்டத்தைத் துண்டிக்க மறவாதீர்கள். டேப்பைக் காந்தசக்தி இளக்கியின் பாதையிலிருந்து தூரமாக வைக்கவும். தலைகளில் மோதாதபடிக்கு அல்லது கீரல் ஏற்படுத்தாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த வேலையை எளிதாக்கிட, கடைகளிலிருந்து சுத்தம்செய்யும் கேஸட்டுகளை அல்லது காந்தசக்தி இளக்கிக் கேஸட்டுகளை வாங்கிக்கொள்ளலாம்.
◼இந்தப் பராமரிப்பு முறைகள் உங்களுக்கு அதிக சிக்கலானவையாக இருந்தால், உதவிக்கு யாரையாவது கேளுங்கள். இன்று கேஸட் டேப்புகளும் டேப் ரிக்கார்டர்களும் சர்வ சாதாரண பொருட்களாக ஆகிவிட்டதால், என்ன செய்ய வேண்டும் என்பதை உங்களுக்குக் காண்பிக்க ஒரு நண்பரைக் கண்டுபிடிப்பது கடினமாயிராது. ஆனால் உங்கள் கேஸட் டேப் ரிக்கார்டரைத் தவறாமல் சுத்தம் செய்வதும் கேஸட்டுகளை சரியான விதத்தில் பாதுகாப்பாக வைப்பதும் நீங்கள் பதிவு செய்திருப்பவற்றை வெகு நாட்களுக்குக் கேட்டு மகிழ்வதைக் கூடிய காரியமாக்கும்.
காவற்கோபுர சங்கம் தற்போது ஒவ்வொரு மாதமும் 5,00,000 கேஸட்டுகளைத் தயாரிக்கிறது. இவை உலகமெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகளால் பயன்படுத்தப்படும் பைபிள் புத்தகங்களின் பதிவுகள், பைபிள் பொருளில் நாடகங்கள், பாட்டுகளுக்கான இசைகள் ஆகியவற்றை உட்படுத்துகின்றன. தொடர்பு கொள்வதற்கான இந்த நவீன உபகரணங்கள் ராஜ்யத்தின் நற்செய்தியை உலக முழுவதும் பிரஸ்தாபப்படுத்துவதில் ஒரு முக்கிய பங்கை ஏற்கின்றன.—மத்தேயு 24:14. (g87 11⁄8)
[பக்கம் 28-ன் படங்கள்]
சுத்தம் செய்வதும் காந்தசக்தியிளக்கமும்: உங்களுடைய கேஸட்டுகளிலிருந்து மிக அதிகத்தைப் பெற்றிட இரண்டு எளிய வழிமுறைகள்.