உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g88 11/8 பக். 2
  • பக்கம் இரண்டு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பக்கம் இரண்டு
  • விழித்தெழு!—1988
விழித்தெழு!—1988
g88 11/8 பக். 2

பக்கம் இரண்டு

இக்குவாகு நீர் வீழ்ச்சி உலகிலுள்ள இயற்கை அற்புதங்களில் ஒன்றாக இருக்கிறது. உயரத்தில் 200-லிருந்து 270 அடி வரை மாறுபடுகின்றன 2 மைல்கள் ஆழமுள்ள, ஒரு வினாடிக்கு 4,50,000 கன அளவு தண்ணீரை 275 வித்தியாசமான நீர்வீழ்ச்சிகளில் வேகமாக இறக்கும் இக்குவாகு அதன் பெயரின் பொருளாகிய “திரளானத் தண்ணீர்” என்பதற்கு ஏற்பவே இருக்கிறது.

நீர்வீழ்ச்சி ப்ரேஸிலுக்கும் ஆர்ஜெண்டீனாவுக்குமிடையே எல்லைக் கோடாக அமைந்திருக்கிறது. இரு தேசங்களுமே அதன் அழகைப் பாதுகாக்க தேசீய பூங்காக்களை உருவாக்கியிருக்கின்றன. இடைவிடாது பெய்கிற தூறளில் கண்கவரும் தாவரங்கள் செழிப்பாக வளர்ந்து காணப்படுகின்றன. பூனையினத்தைச் சேர்ந்த பெரிய ஊனுண்ணி விளங்கும் பூனையின் அமெரிக்க காட்டு விளங்கும், காண்டாமிருகத் தொடர்புடைய பன்றி போன்ற விலங்கும், மான்களும் அதைச்சுற்றியுள்ள காட்டுப்பகுதியில் சுற்றித் திரிகின்றன. பல்வேறுவகைப்பட்ட பறவைகள் கண்களுக்கு களிப்பூட்டுகின்றன. வண்ணத்துப் பூச்சிகளின் கூட்டம் அங்குமிங்கும் சிதறடித்து இதற்கு வருகைத் தருபவர்களின் மீது அமர்ந்து ஓய்வெடுக்கின்றன.

பேரிரைச்சலுடன் இறங்கி வரும் தண்ணீர் மேலெழுகையில் ஏற்படும் பனிப்படலத்தில் வானலில் பளப்பளப்பாக மின்னுகிறது. ஆண்டுகள்தோறும் வருகைத் தரும் 30 லட்சம் பேரின் மனதையும் மயக்குவதற்கு இக்குவாகுவின் கிளர்ச்சியூட்டும் அழகு எத்தனை காலம் இருக்க அனுமதிக்கப்படும்? ஏற்கெனவே மின்சக்தியைப் பெறுவதற்காக நீர்வீழ்ச்சியைப் பயன்படுத்திக்கொள்வது பற்றிய பேச்சு அடிப்பட்டுக் கொண்டிருக்கிறது. மனிதன் பூமி கோளத்தின் பெரும்பகுதிக்கு செய்திருப்பது போல இக்குவாகுவின் அழகையும் அழித்துவிடுவானோ? அல்லது கண்ணுக்கு விருந்தாக இருக்கும் இந்தத் “திரளான தண்ணீர்,” அவனுடைய பிள்ளைகளுக்கும் கிளர்ச்சியூட்டவும் அவர்களை வியப்பில் ஆழ்த்திடவும் இதைப் பாதுகாப்பான?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்