சிங்கப்பூரின் பறவை உலகம்
“பீரங்கியை முழுக்கு!” இந்த ஆணை பிறப்பிக்கப்பட்ட உடனே திடீர் முழக்கம், ஓர் அழகிய நீல வண்ண அமேஸான் கிளி அதன் தலையைச் சாய்க்கிறது. அதன் பலமான அலகு பீரங்கியின் விசையிழுப்பை அழுத்துகிறது. உடனே டேபிள் டென்னிஸ் பந்து போன்ற ஒரு பிளாஸ்டிக் பந்து அந்த உலோகக் குழலிலிருந்து சுடப்படுகிறது. ஆனால் அது வெகு தூரம் செல்வதற்கான வாய்ப்பில்லை. அதற்காக நன்றாகத் தலை சீவிய மிகப்பெரிய அலகுடைய அமெரிக்க பறவை திரு. ஹார்ன் காத்துக்கொண்டிருக்கிறது. தன்னுடைய தலையைச் சற்று அசைத்து அதன் ஆரஞ்சு வண்ண அலகு வாயைத் திறந்து பந்தை எந்தச் சிறமுமின்றி பிடித்துக்கொள்கிறது.
அவற்றைப் பராமரிக்கும் ஆள் அவற்றிற்கு வெகுமதியாகத் தானியம் தருகிறார். அந்தச் சிறிய கொட்டகையில் உட்கார்ந்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள் சேர்ந்து கைத்தட்டுகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய ஏழரை இலட்சம் மக்கள் சிங்கப்பூரின் ஜுராய் பறவை பூங்காவுக்கு விஜயம் செய்கிறார்கள். ஏறக்குறைய 3,000 பறவைகளுக்குப் புகலிடமாகியிருக்கும் 50 ஏக்கர் (20 ஹெக்) நிலபரப்பையுடைய இந்தப் பூங்காவில் உலகமெங்குமிருந்து 300-க்கும் அதிகமான பறவை இனங்கள் ஒன்றுசேர்க்கப்பட்டிருக்கின்றன. எப்பேர்ப்பட்ட வியந்து மகிழும் ஓர் இடம்!
இந்தப் பூங்காவின் 5 ஏக்கர் (2 ஹெக்) பரப்பு இப்பொழுது “உலகின் மிகப்பெரிய பறவைப் பண்ணை” என்று அதிகாரப்பூர்வமான வழிகாட்டி ஏடு விவரிக்கிறது. மரங்களுக்கும் உயரமாக மூடப்பட்டிருக்கும் அருமையான வலைக் கம்பிகளுக்குக் கீழ் நாம் உலாவிவரும்போது எங்கும் பறவைகளைக் காண்கிறோம். பிரகாசமான வண்ணக் கிளிகள் இரச்சலிட்டுக்கொண்டிருக்க, ஓர் அழகிய நீலவண்ணப் பறவை அமைதலாக மரம்விட்டு மரம் தாவிக்கொண்டிருக்கிறது. கருநீல கெளதாரியினப் பறவை ஒன்று அல்லி இலைகளின் குறுக்கே மிடுக்காக நடந்துசெல்கிறது, அதன் அகன்ற பாதங்கள் பூரண சமநிறைவை அளிக்கின்றன. ஏராளமான நீர்க்கோழிகள் நூறு அடி (30மீ) உயரத்திலிருந்து விழும் செயற்கை நீர்வீழ்ச்சியில் நீரோடையில் சிறகடித்துக் குளிக்கின்றன. எங்களுடைய பாதையின் இறுதிக் கட்டமாக, தோகையை முழுவதுமாக விரித்துப் பெருமையுடன் நிற்கும் மயிலைப் பார்த்து ரசிக்கும் ஒரு சுற்றுலா தொகுதியைக் சேர்ந்துகொள்கிறோம்.
முற்றிலும் முரணாக, இரவுப் பண்ணையிலே எல்லாமே அமைதியாக இருக்கிறது. இருண்ட முற்றங்களில் நாங்கள் சீழ்க்கையொலி எழுப்ப, ஆந்தைகள் அசையாமல் உட்கார்ந்துகொண்டிருக்கின்றன. கருங்கீரீடத்தையுடைய இரவு, நாரையினங்கள் செயற்கை சதுப்பு நிலத்தில் பொறுமையாகக் காத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் நாங்கள் பார்க்கக் காத்திருந்த அரிய பறவைகள், நியுஸிலாந்தின் தேசிய சின்னமாக அமையும் கிவீஸ் பறவைகள் எங்கள் கண்களுக்கு காணப்படாமலிருந்தன. அப்பொழுது எதிர்பாராதவாறு ஆஸ்திரேலியாவின் அரிய தவளைவாய்ப் பறவை எங்களையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தது.
மீண்டும் நாங்கள் திறந்த வெளியில் ஏரியைக் கடந்துசெல்லும்போது, செந்நிற நாரையினப் பறவைகள் தங்கள் கூட்டத்தோடு நிற்கும் எழில் மிகு காட்சி எங்களைக் கவர்ந்தது. பின்பு அமைதலான வழியாகச் செல்கிறோம். நாங்கள் மாம்சப் பட்சினிகளைப் பார்த்து வியந்து நிற்கிறோம், பின்பு தேன்சிட்டுகள் அவ்வளவு அழகாக செம்பருத்தி வகை மலர்களிலிருந்து அவ்வாறு மென்மையாகத் தேன் உறிஞ்சும் காட்சி எங்களை மெய்மறக்கச் செய்தது. ஓர் அவுன்ஸ் (28 சிராம்) எடையைவிட குறைவான எடையுடைய இந்த மிகச் சிறய பறவைகள் எப்படி வினாடிக்கு 70 முறை சிறகடிக்கின்றன? உண்மையிலேயே இது ஓர் அற்புதமான திட்ட அமைப்பு.
இந்த ஜுராஸ் பறவைப் பூங்காவின் குடிகளைக் கவனிப்பது ஒரு கடினமான காரியம். சரியான உணவும் சூழ்நிலையும் கவனமாக அளிக்கப்பட வேண்டும். என்றாலும் சிங்கப்பூரின் உஷ்ணத்தின் மத்தியிலும் தென்னமெரிக்க மேற்குக் கடலோரப் பகுதியின் தண்ணீர்களில் வாழ்வது ஹம்போல்ட் பென்குவின் பறவையினம் இப்பிராந்தியத்தின் பாடற் பறவைகளைப்போன்று திருப்திகரமாகப் பெருகுகின்றன.
பஞ்சவர்ணக் கிளிகள் உயர்க் கம்பியில் சைக்கிள் விடும் காட்சியைப் பார்க்க இப்பொழுது சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தோம். ஓலைக் கூரைகளின் குறுக்கே கம்பியில் தன் சைக்கிளை ஓட்ட ஆரம்பித்ததும் சிறுவர்கள் மகிழ்ச்சியில் கூச்சலிடுகின்றனர். “இந்த மேக் கிளிக்கு இதைக் கற்றுக் கொடுக்க மூன்று மாதங்கள் எடுத்தன,” என்று பூங்காவின் மக்கள் தொடர்பு பொறுப்பாளர் ஜெரி டான் விவரிக்கிறார். “நாங்கள் ஆண்டுதோறும் 50 முதல் 60 பறவைகளைப் பழக்குவிக்கிறோம்.” பயிற்சி அளிப்பவர்கள் தயவாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். பறவைகளுக்கு வெகுமதி அளிக்கப்படுகிறதே தவிர அவை தண்டிக்கப்படுவதில்லை. “இன்னும் இரண்டு பயிற்சியாளர்கள் கிடைப்பார்களா என்று பார்த்துக்கொண்டிருக்கிறோம்.”
ஆனால் அது எங்களுக்கானதல்ல. நாங்கள் வடக்கு நோக்கி செல்ல வேண்டும். வனத்துக்குச் சற்று வண்ணத்தையூட்டும் சிவப்பு மார்புடைய ராபின் பறவையைப் பார்க்க செல்ல வேண்டும். அதற்குப் பின்பு, இந்த மகத்துவமான அருவண்ணக் காட்சியின் நினைவுகளை மனதிற்குக் கொண்டுவருவது எவ்வளவு இன்பமாயிருக்கும்!—அளிக்கப்பட்டது
g87 7⁄8