சப்தமாக வாசிப்பது கற்றுக்கொள்வதை மகிழ்ச்சியான அனுபவமாக்குகிறது
“உங்கள் பிள்ளையைக் கட்டி அணைப்பது மட்டுமல்லாமல் அதோடுகூட அடுத்ததாக உங்கள் மனதிலும் உங்கள் நேரத்திலும் ஒரு பகுதியை உங்கள் பிள்ளைக்குக் கொடுங்கள்” என்கிறார் சப்தமாக வாசிப்பதற்கு ஆலோசனைகள் என்ற (The Read-Aloud Handbook) புத்தகத்தின் ஆசிரியர் ஜிம் டிரிலீஸ்.
எவ்விதமாக? அவனுடைய சிறு பிராயத்திலே அவனுக்கு சப்தமாகவும் அடிக்கடியும் வாசித்துக் காண்பிப்பதன் மூலம் என்று டிரிலீஸ் சிபாரிசு செய்கிறார். அதன் மூலம் நீங்களும் உங்களுடைய பிள்ளையும் பெற்றுக்கொள்ளும் அனுபவமும் நன்மைகளும் நீண்ட காலம் நிலைத்திருக்கக்கூடியவையாக இருக்கும். என்ன விதங்களில்? பிள்ளை வளர்ந்து பெரியவனான பின்பும் இப்படிப்பட்ட வாசிப்புகள் இனிமையான பழைய நினைவுகளை, நினைவுக்கு கொண்டுவருவது மட்டுமல்லாமல் உங்கள் பிள்ளை வாசிப்பதிலும் கற்றுக்கொள்வதிலும் திறமையுள்ளவனாக ஆவதற்கும்கூட இது உதவி செய்கிறது. உங்கள் பிள்ளை அவனுடைய பார்வையாற்றலையும்கூட வளர்த்துக்கொள்வான். ஏனென்றால் அவன் ஒரு படத்தின் மீது தன் கவனத்தை ஊன்ற வைக்க கற்றுக்கொள்கிறான். உதாரணமாக 18 மாதங்களில் ஒரு பிள்ளை ஏற்கெனவே ஒரு நாய் குட்டியை படத்தில் காட்டவும், அந்த வார்த்தையை வாசிப்பதற்கு வெகு நாட்களுக்கு முன்பாகவே அந்த வார்த்தையை புரிந்துகொள்ளக் கூடியவனாகவும் இருக்கிறான். மேலுமாக, உங்கள் பிள்ளையின் வாசிக்கும் எழுதும், பேசும், கவனித்துக்கேட்கும் மற்றும் கற்பனை திறமைகள் வளர்வது மட்டுமல்லாமல், ஒரு நல்ல வாசகராக ஆவதினிடமாக அவனுடைய மனநிலையும்கூட அபிவிருத்தி அடைகிறது. அவன் வாசிப்பதில் மகிழ்ச்சியைக் காண்கிறான்.
“என்னுடைய பிள்ளைகளுக்கு சப்தமாக வாசித்துக் காண்பிப்பதற்கு தேவையான நேரமும் சக்தியும் என்னிடம் எங்கே இருக்கிறது?” என்பதே அநேக பெற்றோர்களின் புலம்பலாக இருக்கிறது.
ஜிம் டிரிலீஸ் சொல்வதாவது: “தன்னுடைய பிள்ளைகளுக்கு வாசித்துக் காண்பிக்க மிகவும் களைப்பாய் இருப்பதாகச் சொல்லும் தகப்பன், அதே இரண்டு கண்களால், மணிக்கணக்காக டெலிவிஷன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.”
இந்த மனநிலையில் ஒரு தீவிர மாற்றத்தைச் செய்வதற்கு ஆசிரியர் டிரிலீஸ் பின்வரும் இந்தக் குறிப்புகளை எதிர்காலத்தில் தங்கள் குழந்தைகளுக்கு வாசிக்கும் பெற்றோரோடு பகிர்ந்து கொள்கிறார்:
1. பொருத்தமான புத்தகங்களை வாசியுங்கள். பெரும்பாலான பிள்ளைகள் தங்களுக்கு பிரசங்கம் செய்யும் புத்தகங்களை விரும்புவதில்லை. ஆனால் மேற்கொள்ளப்படுவதற்கு ஒரு சச்சரவை அல்லது பிரச்னைகளையுடைய கதைகளை அவர்கள் அனுபவித்து வாசிக்கிறார்கள். என்றபோதிலும், முன்கூட்டியே நீங்கள் தாமே புத்தகத்தை பார்வையிடுவதன் மூலம் அந்தப் புத்தகம் வாசிக்கப்படுவதை கேட்க பிள்ளை உணர்ச்சிப் பூர்வமாக தயாராக இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும்.
2. மிகச் சிறந்த நேரத்தை தெரிந்தெடுங்கள். அதிகாலையில் உங்கள் பிள்ளை மிகவும் விறைப்பாக இருக்கும் சமயம் வாசிப்பதற்கு ஒருவேளை மிகச் சிறந்த சமயமாக இருக்க முடியாது. உயரமான ஒரு நாற்காலியில் பிள்ளை உட்கார்ந்திருக்கையில், மற்றும் அந்த நொறுக்குத் தீனியை கொரித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் சிலர் வாசிக்கிறார்கள். படுக்கைக்குப் போகும் சமயமே மிகச் சிறந்த நேரமாக இருக்கிறது. அவன் நீண்ட நேரம் கவனம் செலுத்தக்கூடியவனாக இருக்கிறான்.
3. சவாலை எதிர்படுங்கள். ஒரு பிள்ளை அறிந்து பயன்படுத்தும் வார்த்தைகளின் தொகுப்புக்கு அப்பால் மிகுதியான வார்த்தைகளையுடைய ஒரு புத்தகத்தை வாசிப்பதில் தவறேதுமில்லை. பெற்றோர் அந்த வார்த்தைக்கு எளிய விளக்கத்தைக் கொடுக்கவோ, பொழிப்புரையைத் தரவோ அல்லது கடினமானப் பகுதிகளை இடையே விட்டுவிடவோ செய்யலாம்.
4. உங்களுடைய வாசிக்கும் திறமைகளை பயன்படுத்துங்கள். சப்தமாக வாசிக்கையில் போதிய அளவு சுவாசிப்பதும் வேகத்தை முறைப்படுத்துவதும் அவசியமாக இருக்கிறது. உங்களுடைய வாசிப்பைக் குறித்து உங்களுக்கு சந்தேகமிருந்தால், ஒரு கதையை டேப்பில் பதிவுசெய்து, மீண்டும் அதைப் போட்டு பார்த்து, உங்களுடைய வாசிப்புத் திறமையை மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்.
5. கவனம் நீடிக்கும் அளவைக் குறித்து விழிப்பாயிருங்கள். உண்மைதான். ஒரு நல்ல கதை உங்கள் பிள்ளையின் கவனத்தை கவரக்கூடும். ஆனால் கதைக்கு அவன் தன் முழு கவனம் செலுத்தாமல் இருக்கக்கூடும். என்றபோதிலும் அதிலிருந்து எதையாவது அவன் கற்றுக்கொள்வான்.
6. பொறுமையாயிருங்கள். ஒரே திரைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து மகிழும் சில வயதுவந்த ஆட்களைப் போலவே, பிள்ளைகள் அவர்களுக்கு விருப்பமான கதையை மீண்டும் மீண்டும் வாசித்து காண்பிப்பதை விரும்பக்கூடும். ஏனென்றால் ஒவ்வொரு சமயமும் அதற்கு புதிய அர்த்தங்கள் இருப்பதை அவர்கள் கண்டு பிடிக்கிறார்கள். ஆகவே அவன் விரும்பும் ஒரு புத்தகத்தை அவனிடமிருந்து எடுத்துவிடுவதற்கு பதிலாக, வெறுமென ஒரு புதிய கதையை அதோடு சேர்த்துக் கொள்ளுங்கள். (g87 6⁄22)