‘அவர்கள் சுற்றி வளைந்து பேசுவதில்லை’
காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளுக்கு ஆண்டு சந்தா கேட்டு எழுதிய தனது கடிதத்தில் ஒரு வாசகன் இவ்வாறு எழுதினான்:
உங்களுடைய பத்திரிகைகள் அதிக அக்கறைத் தூண்டுவதாக இருக்கின்றன, மேலும் பைபிள் நியமங்களை கண்டுபிடிப்பதற்கு அதிக உதவியாக இருக்கின்றன. . . . நான் ஒரு கத்தோலிக்கன். ஆனால் பைபிளும் அதன் மகிமையான செய்தியும், சாட்சிகள் அறிவிக்கும் விதத்தில் அறிவிக்கப்பட்டிருப்பதை நான் ஒருபோதும் கேள்விப்படவுமில்லை, கண்டதுமில்லை. ஜனங்கள் தப்பெண்ணங் கொண்டவர்களாக இருந்தபோதிலும், இவை நெருக்கடியான காலங்களாக இருந்தபோதிலும், நீங்கள் தொடர்ந்து உங்கள் வேலையை செய்து வருவீர்கள் என்று நம்புகிறேன். நான் பல சர்ச்சுகளுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் பைபிளும் அதன் அர்த்தமும் விளக்கப்படுவதைக் குறித்ததில், சாட்சிகள் சுற்றி வளைந்து பேசுவதில்லை என்பதை அறிந்திருப்பது எவ்வளவு நல்ல உணர்ச்சியை எனக்குத் தருகிறது. இது புத்துயிரளிக்கும் ஒரு மாற்றமாக இருக்கிறது.
தமிழில் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளுக்கு ஒரு ஆண்டு சந்தாவை எனக்கு தயவுசெய்து அனுப்புங்கள்; ரூ36/- (மாதம் இருமுறை வெளியிடப்படும் ஆங்கில பத்திரிகைகளுக்கு ரூ70/-)இத்துடன் அனுப்பியுள்ளேன்.