அர்ப்பணிப்பின் பரிசுத்த அடையாளம்
தலைமைக் குருவுடைய தலைப்பாகையின் முன்பகுதியில் கட்டப்பட்ட பளபளப்பான தகடு. இது சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. இதில், “யெகோவா பரிசுத்தமே உருவானவர்” என்று எபிரெயுவில் பொறிக்கப்பட்டிருந்தது. (யாத் 39:30)—இணைப்பு B5-ஐப் பாருங்கள்.