ஆபகூக்
1 ஒரு தரிசனத்தில் ஆபகூக்* தீர்க்கதரிசிக்குக் கிடைத்த செய்தி இதுதான்:
2 அவர் கடவுளிடம், “யெகோவாவே, நான் எவ்வளவு காலத்துக்குத்தான் உதவிக்காகக் கதறுவேன், நீங்கள் ஏன் கேட்காமல் இருக்கிறீர்கள்?+
வன்முறையிலிருந்து காப்பாற்றும்படி எவ்வளவு காலத்துக்குத்தான் கேட்பேன், ஏன் கண்டுகொள்ளாமல்* இருக்கிறீர்கள்?+
3 என்னை ஏன் அக்கிரமங்களைப் பார்க்க வைக்கிறீர்கள்?
கொடுமைகள் நடப்பதை ஏன் பொறுத்துக்கொள்கிறீர்கள்?
நாச வேலைகளும் வன்முறைகளும் ஏன் என்னுடைய கண் முன்னாலேயே நடக்கின்றன?
எங்கு பார்த்தாலும் ஏன் சண்டையும் சச்சரவுமாக இருக்கிறது?
4 சட்டத்தை யாரும் மதிப்பதே இல்லை.
எங்குமே நியாயம் இல்லை.
நீதிமானைக் கெட்டவன் ஆட்டிப்படைக்கிறான்.
அதனால்தான், நீதி புரட்டப்படுகிறது”+ என்று சொன்னார்.
5 “ஜனங்களே, சுற்றியுள்ள தேசங்களைக் கூர்ந்து கவனியுங்கள்!
ஏனென்றால், உங்களுடைய காலத்தில் ஒரு சம்பவம் நடக்கப்போகிறது.
அதைப் பற்றிச் சொன்னால்கூட நீங்கள் நம்ப மாட்டீர்கள்.
ஆனாலும், அதை ஆச்சரியத்தோடு பாருங்கள்; பார்த்து அதிர்ச்சி அடையுங்கள்.+
பெரிய பெரிய தேசங்கள்மேல் படையெடுப்பவர்கள்.
தங்களுக்குச் சொந்தமில்லாத இடங்களைக் கைப்பற்றுபவர்கள்.+
7 அவர்கள் கொடூரமானவர்கள், பயங்கரமானவர்கள்.
அவர்களே தங்களுக்குச் சட்டத்தை உருவாக்கிக்கொள்கிறார்கள்,
அவர்களே அதிகாரத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.*+
8 அவர்களுடைய குதிரைகள் சிறுத்தையைவிட வேகமாக ஓடும்.
ராத்திரியில் திரிகிற ஓநாய்களைவிட மூர்க்கமாக இருக்கும்.+
அவர்களுடைய போர்க்குதிரைகள் துள்ளிக் குதித்து ஓடும்.
அவை வெகு தூரத்திலிருந்து வரும்.
இரையைப் பார்த்ததும் அதன்மேல் பாய்கிற கழுகு போல வேகமாகப் பாயும்.+
9 அவர்கள் எல்லாவற்றையும் நொறுக்கிப்போட படைதிரண்டு வருவார்கள்.+
சுட்டெரிக்கும் கிழக்குக் காற்றைப் போல வேகமாக வருவார்கள்.+
மணலை அள்ளுவது போல ஜனங்களை அள்ளிக்கொண்டு போவார்கள்.
கோட்டைகளைப் பார்த்துக் கேலியாகச் சிரிப்பார்கள்.+
மண்மேடுகளை எழுப்பி அந்தக் கோட்டைகளைக் கைப்பற்றுவார்கள்.
11 காற்றைப் போல வேகமாகத் தேசத்தைக் கடந்து போவார்கள்.
ஆனால், தங்கள் தெய்வம்தான் தங்களுக்குப் பலம் தந்ததாகச் சொல்வார்கள்.*+
அதனால், குற்றவாளிகளாக ஆவார்கள்.”+
12 யெகோவாவே, நீங்கள் என்றென்றும் இருப்பவர்.+
என் கடவுளே, பரிசுத்தமான கடவுளே, உங்களுக்குச் சாவு என்பதே இல்லை.*+
யெகோவாவே, எங்களுக்குத் தண்டனைத் தீர்ப்பைக் கொடுக்கத்தான் அவர்களை நியமித்தீர்கள்.
கற்பாறை போன்றவரே,+ எங்களைத் தண்டிப்பதற்குத்தான்* அவர்களை வரவழைத்தீர்கள்.+
13 மிகவும் பரிசுத்தமான உங்களுடைய கண்கள் தீமையைப் பார்த்து ரசிக்காதே!
அக்கிரமங்களை உங்களால் சகிக்க முடியாதே!+
அப்படியிருந்தும், நயவஞ்சகர்களை ஏன் பொறுத்துக்கொள்கிறீர்கள்?+
நீதிமானைக் கெட்டவன் ஆட்டிப்படைப்பதைப் பார்த்து ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்?+
14 கடல்மீன்களைப் போலவும் ஆதரவில்லாத* கடல் பிராணிகளைப் போலவும்
மனிதர்கள் நடத்தப்படுவதற்கு ஏன் விடுகிறீர்கள்?
அதில் வாரிக்கொள்கிறான்.
அதனால், சந்தோஷத்தில் துள்ளுகிறான்.+
16 தன்னுடைய வலைகளுக்கு அவன் பலிகளைச் செலுத்துகிறான்.
அவற்றுக்குத் தூபம் காட்டுகிறான்.
ஏனென்றால், அவற்றால்தான் அவனுக்குச் செல்வம் குவிந்தது,*
அருமையான உணவும் கிடைத்தது.
17 அப்படியானால், அவன் தன் வலையை விரித்துக்கொண்டே இருப்பானா?*
கரிசனை இல்லாமல் ஜனங்களைக் கொன்று குவித்துக்கொண்டே இருப்பானா?+
என் மூலம் அவர் என்ன செய்தி சொல்லப்போகிறார் என்பதைக் கேட்க ஆவலோடு எதிர்பார்த்திருப்பேன்.
அவர் என்னைக் கண்டிக்கும்போது என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பேன்.
2 யெகோவா என்னிடம் இப்படிச் சொன்னார்:
“இந்தத் தரிசனத்தை எழுதி வை, பலகைகளில் தெளிவாகச் செதுக்கி வை.+
அப்போதுதான், அதைச் சரளமாக வாசித்துக் காட்ட முடியும்.+
3 நிறைவேற வேண்டிய காலத்தில் தரிசனம் நிறைவேறும்.
அது வேகமாய் வந்துகொண்டிருக்கிறது; அது வராமல் போகாது.*
ரொம்ப நாட்கள் ஆவதுபோல் தெரிந்தாலும் அதற்காகக் காத்திரு.*+
தரிசனம் நிச்சயம் நிறைவேறும்.
அது கொஞ்சம்கூடத் தாமதிக்காது!
அவனுடைய மனதில் நேர்மையே இல்லை.
கல்லறையைப் போலப் பேராசையோடும்,
மரணத்தைப் போலத் திருப்தி அடையாமலும் இருக்கிறான்.
தேசங்களைச் சளைக்காமல் கைப்பற்றுகிறான்.
ஜனங்கள் எல்லாரையும் வளைத்துப் பிடிக்கிறான்.+
6 அவர்கள் எல்லாரும் அவனைக் கேலி செய்து நக்கலாகவும் குத்தலாகவும் பேசுவார்கள்.+
அவனைப் பார்த்து இப்படிச் சொல்வார்கள்:
‘மற்றவர்களுக்குச் சொந்தமானதைப் பிடுங்கிக்கொள்பவனே, உனக்குக் கேடுதான் வரும்!
இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படிச் செய்வாய்?
உன் கடனை அதிகமாக்கிக்கொண்டே இருக்கிறாயே!
7 உனக்குக் கடன் கொடுத்தவர்கள் திடீரென்று உன்மேல் பாய்வார்கள்.
அவர்கள் விழித்துக்கொண்டு, உன்னைப் பயங்கரமாக உலுக்கியெடுப்பார்கள்.
உன்னைச் சூறையாடுவார்கள்.+
8 மற்ற தேசங்களையெல்லாம் நீ சூறையாடினாயே.
ஜனங்களின் இரத்தத்தைச் சிந்தினாயே.
பூமியில் நாச வேலைகளைச் செய்தாயே.
நகரங்களையும் அங்குள்ள ஜனங்களையும் பாழாக்கினாயே.+
இப்போது, மீதியிருக்கிற ஜனங்கள் உன்னைச் சூறையாடுவார்கள்.+
9 குடும்பத்துக்காக* குறுக்கு வழியில் சம்பாதிக்கிறவனே, உனக்குக் கேடுதான் வரும்!
அழிவின் பிடியிலிருந்து நீ தப்பிக்க நினைக்கிறாய்.
அதற்காக உயரமான இடத்தில் தங்குவதற்குத் திட்டமிடுகிறாய்.
10 சதித்திட்டங்கள் தீட்டுவதால் உன் குடும்பத்துக்கு அவமானத்தைத் தேடிக்கொள்கிறாய்.
ஜனங்களைக் கொன்று குவிப்பதால் உனக்கு எதிராகவே நீ பாவம் செய்கிறாய்.+
11 அதனால், சுவரிலுள்ள கல் உனக்கு எதிராகக் கூச்சல்போடும்.
கூரையிலுள்ள மரச்சட்டம் அதை எதிரொலிக்கும்.
12 ஜனங்களின் இரத்தத்தைச் சிந்தி நகரத்தைக் கட்டுகிறவனுக்கும்,
அநீதியினால் ஒரு ஊரை உருவாக்குகிறவனுக்கும் கேடுதான் வரும்!
13 ஜனங்களின் உழைப்பெல்லாம் நெருப்புக்குப் பலியாகிறது.
தேசங்கள் படும் பாடுகளெல்லாம் வீணாகிறது.
இப்படி நடக்கும்படி செய்பவர் பரலோகப் படைகளின் யெகோவாதான்.+
14 கடல் முழுவதும் தண்ணீரால் நிறைந்திருப்பது போல
பூமி முழுவதும் யெகோவாவின் மகிமையைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்.+
15 ஆத்திரத்தோடும் கோபத்தோடும் நண்பர்களுக்கு மதுபானம் கொடுப்பவனே,
உனக்குக் கேடுதான் வரும்!
போதையேறும் அளவுக்கு நீ அவர்களைக் குடிக்க வைக்கிறாய்.
அவர்களுடைய நிர்வாணத்தைப் பார்ப்பதற்காகவே இப்படிச் செய்கிறாய்!
16 நீ பேரும் புகழும் அடைவதற்குப் பதிலாகப் பெருத்த அவமானம் அடைவாய்.
நீயும் நன்றாகக் குடி! விருத்தசேதனம் செய்யப்படாத உன் கோலத்தை எல்லாருக்கும் காட்டு!*
யெகோவாவின் வலது கையிலிருக்கும் கோப்பை உன்னிடம் வரும்.+
அப்போது, உன் புகழை இழந்து கேவலப்பட்டுப்போவாய்.
17 நீ ஜனங்களின் இரத்தத்தைச் சிந்தினாய்.
பூமியில் கொடுமைகள் செய்தாய்.
நகரங்களையும் ஜனங்களையும் நாசமாக்கினாய்.
லீபனோனுக்குக் கொடுமை செய்தாய், அது போல நீயும் கொடுமை செய்யப்படுவாய்.
மிருகங்களை அழித்தாய், அது போல நீயும் அழிக்கப்படுவாய்.+
18 சிலையைச் செதுக்குகிறவனுக்கு அதனால் என்ன பிரயோஜனம்?
அவன் கையால்தானே அதைச் செதுக்கினான்?
உலோகச் சிலையையும் பொய்யைப் போதிக்கிற சிலையையும்
அவன் நம்பினாலும் அவற்றால் என்ன பிரயோஜனம்?
அவை ஒன்றுக்கும் உதவாத ஊமைத் தெய்வங்கள்தானே?+
19 ஒரு மரத்துண்டைப் பார்த்து, “கடவுளே, கண்திறக்க மாட்டாயா?” என்று கேட்கிறவனுக்கும்,
பேச முடியாத கல்லைப் பார்த்து, “இறைவா, கண் திறந்து எங்களுக்கு நல்ல வழி காட்டு” என்று சொல்கிறவனுக்கும் கேடுதான் வரும்!
20 ஆனால், யெகோவா தன்னுடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்.+
பூமியெல்லாம் அவருக்கு முன்னால் அமைதியாக இருக்கட்டும்.’”+
3 ஆபகூக் தீர்க்கதரிசி கடவுளிடம் பாடிய புலம்பல் பாட்டு:
2 “யெகோவாவே, இதுவரை நீங்கள் செய்திருக்கிற காரியங்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன்.
யெகோவாவே, அவற்றை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது.
சரியான சமயத்தில்* மறுபடியும் அவற்றைச் செய்யுங்கள்.
சரியான சமயத்தில்* அவற்றை எல்லாருக்கும் தெரியப்படுத்துங்கள்.
உங்களுடைய கோபத்தைக் காட்டும்போது,* எங்களுக்கு இரக்கம் காட்ட மறந்துவிடாதீர்கள்.+
வானம் அவருடைய மகிமையால் நிறைந்தது.+
பூமி அவருடைய புகழால் நிரம்பியது.
4 அவர் ஒளிபோல் பிரகாசமாக இருந்தார்.+
அவருடைய பலம் அவர் கையில் மறைந்திருந்தது.
அங்கிருந்து இரண்டு ஒளிக்கதிர்கள் புறப்பட்டன.
6 அவர் அசையாமல் நின்று பூமியை அதிர வைத்தார்,+
ஒரு பார்வை பார்த்து தேசங்களை நடுநடுங்கச் செய்தார்.+
காலம்காலமாக இருந்த மலைகள் நொறுங்கின.
பழங்கால குன்றுகளும் தரைமட்டமாயின.+
பூர்வ காலத்திலிருந்து அவர் செய்துவரும் செயல்களே இவை.
7 கூஷானின் கூடாரங்களைத் திகில் கவ்வியது.
மீதியான் தேசத்தின் கூடாரத் துணிகள் படபடத்தன.+
8 யெகோவாவே, ஆறுகள்மீதா உங்களுக்கு ஆக்ரோஷம்?
நதிகள்மீதா உங்களுக்கு ஆவேசம்?
கடல்மீதா உங்களுக்குக் கடும் கோபம்?+
9 நீங்கள் வில்லைக் கையில் ஏந்திக்கொண்டிருக்கிறீர்கள்.
உறுதிமொழியின்படியே, கம்புகள்* தாக்குவதற்குத் தயாராக இருக்கின்றன. (சேலா)
நீங்கள் பூமியைப் பிளந்து ஆறுகளை உண்டாக்குகிறீர்கள்.
10 மலைகள் உங்களைப் பார்த்து வேதனையில் துடிதுடித்தன.+
மழைநீர் வெள்ளமாக அடித்துக்கொண்டு போனது.
ஆழத்திலுள்ள தண்ணீர் பெரும் இரைச்சல் போட்டது.+
அது மேல்நோக்கிப் பீச்சியடித்தது.
11 சூரியனும் சந்திரனும் வானத்தில் அசையாமல் நின்றன.+
உங்களுடைய அம்புகள் ஒளியைப் போல வேகமாகப் பாய்ந்தன.+
உங்களுடைய ஈட்டி மின்னலைப் போல மின்னியது.
12 நீங்கள் கடும் கோபத்தோடு பூமியில் நடந்துபோனீர்கள்.
ஆக்ரோஷத்தோடு தேசங்களை மிதித்துப் போட்டீர்கள்.
13 உங்கள் ஜனத்தைக் காப்பாற்றுவதற்கு, நீங்கள் தேர்ந்தெடுத்த* ஜனத்தைக் காப்பாற்றுவதற்கு, புறப்பட்டுப்போனீர்கள்.
பொல்லாதவனுடைய வீட்டுத் தலைவனை நொறுக்கினீர்கள்.
அந்த வீடு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. (சேலா)
14 பாவப்பட்டவனைப் பதுங்கியிருந்து தாக்குவதில் அவனுடைய போர்வீரர்களுக்கு ஒரே கொண்டாட்டம்!
என்னைத் துரத்தியடிக்க* அவர்கள் புயல் வேகத்தில் வந்தார்கள்.
ஆனால், நீங்கள் அவர்களுடைய ஆயுதங்களை வைத்தே அவர்களுடைய தலையைப் பிளந்தீர்கள்.
15 கடலில் உங்கள் குதிரைகளை ஓட்டிக்கொண்டு போனீர்கள்.
கொந்தளிக்கும் தண்ணீர்மேல் சவாரி செய்தீர்கள்.
16 செய்தியைக் கேட்டு நான் குலைநடுங்கினேன்.
என் உதடுகள் துடிதுடித்தன.
என் எலும்புகள் உளுத்துப்போயின.+
கால்கள் கிடுகிடுவென்று ஆடின.
ஆனாலும், அழிவு* நாளுக்காக நான் பொறுமையோடு* காத்திருக்கிறேன்.+
ஏனென்றால், எங்களைத் தாக்குபவர்களுக்கு எதிராக அது வருகிறது.
17 அத்தி மரம் பூத்துக் குலுங்காமல் போகலாம்.
திராட்சைக் கொடியில் பழங்கள் இல்லாமல் போகலாம்.
ஒலிவ மரம் காய்க்காமல் போகலாம்.
வயல்களில் பயிர்கள் விளையாமல் போகலாம்.
பட்டியில் ஆடுகள் காணாமல் போகலாம்.
தொழுவத்தில் மாடுகள் இல்லாமல் போகலாம்.
18 ஆனாலும், நான் யெகோவாவை நினைத்து சந்தோஷத்தில் துள்ளுவேன்.
என்னை மீட்கும் கடவுளை நினைத்து பூரித்துப்போவேன்.+
19 உன்னதப் பேரரசராகிய யெகோவாவே என் பலம்.+
அவர் என்னை மான்களைப் போலத் துள்ளி ஓட வைப்பார்.
உயரமான இடங்களில் என்னை நடக்க வைப்பார்.”+
இசைக் குழுவின் தலைவனுக்கு; என்னுடைய நரம்பிசைக் கருவிகளை வைத்துப் பாடுவதற்கு.
ஒருவேளை இதன் அர்த்தம், “இறுக்கமாகக் கட்டிப்பிடித்தல்.”
வே.வா., “காப்பாற்றாமல்.”
வே.வா., “தங்களை உயர்த்திக்கொள்கிறார்கள்.”
அல்லது, “அவர்களுடைய பலம்தான் அவர்களுக்குத் தெய்வம்.”
அல்லது, “நாங்கள் சாகப்போவதே இல்லை.”
வே.வா., “கண்டிப்பதற்குத்தான்.”
வே.வா., “அதிகாரி இல்லாத.”
அதாவது, “கல்தேயன்.”
நே.மொ., “கொழுமையான பங்கு கிடைத்தது.”
அல்லது, “வாளை உருவிக்கொண்டே இருப்பானா?”
வே.வா., “மண்மேட்டின் மேல்.”
வே.வா., “பொய்த்துப்போகாது.”
வே.வா., “அது தாமதித்தாலும் அதற்காக ஆவலோடு எதிர்பார்த்திரு.”
அல்லது, “விசுவாசத்தினால்; நம்பிக்கையினால்.”
நே.மொ., “அகம்பாவம் பிடித்தவன்.”
வே.வா., “வம்சத்துக்காக.”
அல்லது, “குடித்துவிட்டுத் தள்ளாடு.”
அல்லது, “எங்களுடைய காலத்தில்.”
அல்லது, “எங்களுடைய காலத்தில்.”
வே.வா., “நீங்கள் கலவரத்தை வெடிக்கச் செய்யும்போது.”
சொல் பட்டியலைப் பாருங்கள்.
வே.வா., “மீட்பு.”
அல்லது, “அம்புகள்.”
வே.வா., “அபிஷேகம் செய்த.”
வே.வா., “சிதறடிக்க.”
வே.வா., “இக்கட்டு.”
வே.வா., “அமைதியாக.”